ரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை தாமதிக்காமல் நீதிமன்றங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்-நிமல்

45 0

ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகள் தாமதிப்பதனால் நீதிமன்ற வழங்கு தீர்ப்புகள் தாமதிக்கப்படுகின்றன. அதனால் ரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை தாமதிக்காமல் நீதிமன்றங்களுக்கு வழங்குவதற்கு முறையான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவேண்டும் என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணித்த பின்னர், திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் நவீன உபகரணங்கள் இருக்கின்றபோதும் நீதிமன்றத்தால் ரசாயண பகுப்பாய்வு அறிக்கைகள் கேட்டிருக்கும் அளவு கடந்த இரண்டுவருடங்களில் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக போதைப்பொருள் பிரிவில் நூற்றுக்கு 150அளவில் அறிக்கைகள் கோரி இருப்பதில் அதகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த தாமதமடைவதை தடுப்பதற்காக இந்த திணைக்களத்தில் தற்போது இருக்கும் 31பேர் கொண்ட ஆளணிக்கு மேலதிகமாக ஆட்களை உடனடியாக இணைத்துக்காெள்ள நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என செயலாளருக்கு ஆலோசனை தெரிவித்தார்.

எனவே இந்த வருடத்துக்கான ரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையொன்றை டிசம்பர் மாதம் முடிவடைவதற்குள் செயலாளருக்கு சமர்ப்பிக்கவும் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் ரசாயண பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிப்பதன் முன்னேற்றம் தொடர்பாக  செயலாளர் கண்காணிக்கவேண்டும் என்றார்.