ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக செயற்பட்ட செய்திவாசிப்பாளர் சிஐடியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்
முன்னாள் நிதியமைச்சர் இதனை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன, சஜித்திற்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் யூடியுப்பில் செய்தி வாசித்த சஞ்சய தனுஸ்கவை சிஐடியினர் 8 மணித்தியாலங்கள் விசாரணை செய்துள்ளனர் என மங்களசமரவீர டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
எனது ஊடகப்பிரிவின் தலைவரான ருவான்பேர்டினான்டெஸ் அடுத்த இலக்கா எனவும் மங்களசமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

