கார்த்திகை மின்மினிப் பூச்சி ஒளிப் புன்னகையில் மிளிர்கிறது!

369 0

புதர் மண்டிய துயிலும் இல்லத்தில்
கார்த்திகை மின்மினிப் பூச்சி
ஒளிப் புன்னகையில் மிளிர்கிறது.

.
விதைந்திருப்பவர்கள்
காற்றின் பெருவெளியெங்கும்
மகரந்தம் மணிகளாய் பரவுகிறார்கள்.
யார் இவர்கள்?
மரணத்தால் பெயர் எழுதிய மாவீரர்கள்.

.
ஈழ நிலத்தின்
ஆழ் பரப்பெங்கும் புதைந்து
துளிர் விட்டிருக்கின்றன உணர்வுகள்.

.
அது,
யுகம் அழிந்த நிலையும்
அழிக்க முடியாத வீரச் சொல்.

.
இனி
வணக்கத்துக்குரியவர்களின் புனிதமண்
துரோகத்தால் தடை செய்யப்படலாம்.

.
ஆயினும்
மனதின் எண்ணக் கிடங்கில்
பிரார்த்தனையின்
சுடர் திரிகள் கொழுந்து விட்டெரிகின்றன.

அதில்
நினைவு வளரும் தாவரம்.

கோ.நாதன்.