இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

301 0

கட்டுபெத்த, அங்குலானை சந்தி, மொரடுவை பிரதேசத்தில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மொரடுவை பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலை கட்டிடம் நான்கு மாடிகளை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், பிரதேச வாசிகள், பொலிஸார், தெஹிவலை, மொரடுவை, மருதானை மற்றும் கல்கிஸ்ஸ தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயிணை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மொரடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.