பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு செயற்பட்ட போதைப்பொருள் கும்பல் கைது

306 0

ஹங்குரன்கெத்த மற்றும் ராகல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக ஹங்குரன்கெத்த மற்றும் ராகல, வலப்பனை ஆகிய பிரதேச பாடசாலைகளை இலக்காக கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இந்த போதைப்பொருள் வர்த்தகம் சிலரால் முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் வைத்து 580 மில்லி கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களும், ராகல பிரதேசத்தில் வைத்து இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 3 கிராம் 890 மில்லி கிராம் கஞ்சாவுடன் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (22) வலப்பனை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.