இன்றைய தினம் இறுதி முடிவெடுக்க பாராளுமன்றக் குழு கூடும்

227 0

மக்கள் ஆணையை சாதகமாக பரிசீலித்து பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. 

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.

மக்கள் ஆணை வழங்கியுள்ளமையினால் புதிய பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேவை எழுந்துள்ளது. இதனால் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு ஆணை வழங்க வேண்டும் என்று புதிய ஜனாதிபதி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்   சாதகமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அரசாங்க பாராளுமன்ற குழுக் கூட்டத்திலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆணையை மதித்து புதிய பாராளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.