வன்முறை சம்பவங்கள் குறைந்த ஜனாதிபதித் தேர்தல்!

269 0

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலேயே குறைந்த வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்த கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 222 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இருப்பினும், இம்முறை தேர்தலில் அது 196 ஆக குறைந்துள்ளது.

இந்த கணிப்பீடு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட  நாள் முதல் நேற்று வரை இடம்பெற்ற சம்பவ பதிவுகளின் அடிப்படையில் பெறப்பட்டவை எனவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.