வீதி விபத்தில் ஒருவர் பலி

347 0

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மாவனெல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் 16 வயதான ரூவிர சந்தீப என்பவரே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியின் சாரதி மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் சடலம் மாவனெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவனெல்ல பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.