அனர்த்த நிலைமைகளை தடுப்பதற்கு விசேட ஒன்றிணைந்த நடவடிக்கைப் பிரிவு

316 0

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டு அதன்மூலம் வாக்களிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படுமாயின் அதனை தடுப்பதற்காக விசேட ஒன்றிணைந்த நடவடிக்கை பிரிவு ஒன்றை இன்று எதிர்வரும் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கை பிரிவு கடந்த 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதில் தேர்தல்கள் ஆணைக்குழு, அரச நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சு, முப்படையினர் ஆகிய துறைகளை சேர்ந்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

தேர்தல் நடைபெறும் இந்த காலப்பகுதியில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில்  0702 117 117 / 0113 668 032 /  0113 668 028 / 0113 668 029 /  0113 668 030 ஆகிய தொலைப்பேசி இலங்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அந்த பிரிவு மக்களை கேட்டுள்ளது.