தேர்தல் தினத்தில் ஒட்டுவதற்கு தயாராக இருந்த சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது

289 0

மாதம்பை பகுதியில் தேர்தல் தினத்தில் ஒட்டுவதற்கு தயாராக இருந்த ஒரு தொகை சேறு பூசும் விதமான சுவரொட்டிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாதம்பை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தொடர்புடைய சில சம்பவங்கள் குறித்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.