மிலேனியம் சேஞ் கோபரேஷன் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக போலி பிரசாரங்கள் பரவி வருவதாக குற்றஞ்சாட்டும் கெபினட் அந்தஸ்த்து அல்லாத அமைச்சர் அஜித் பீ கோட்டா அணியினர் பொய்களை உருவாக்கும் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளனர் எனவும் சாடினார்.
கொழும்பு 02 இல் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
2015 தேர்தலின் போதும் இவ்வாறான போலி ஆவணங்களை மஹிந்த தரப்பினர் வெளிப்படுத்தியதாகவும், இன்றவில் அவர்களின் போலிப்பிரசாரத்துக்காக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தொடர்புபடுத்திக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர் எனவும் சாடினார்.
அதேபோல் ஊடங்களும் இவ்வாறான விடயங்களை பொறுப்புடன் அறிக்கையிட வேண்டுமென கோரிய அவர், கோட்டாவின் போலி பிரசார முயற்சிகளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கோட்டா அணியினர் இந்த ஒப்பந்தத்தின் உள்ளீடுகள் பற்றிய உண்மை எதனையும் அறியாமல் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும், அந்த அணியிலுள்ள பந்துல குணவர்தன எம்.பி கூட அதன் உள்ளீடுகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில் எனவும் தெரிவித்தார்.

