போதைப்பொருடன் இருவர் கைது!

324 0

வெல்லம்பிட்டிய பகுதியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருடன் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்  கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோகிராம் ஐஸ், 2.449 கிலோ கிராம் அஷிஸ் மற்றும் 16 கிராம் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.