மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் விசேட செயலணி- சஜித்

290 0

தான் ஜனாதிபதியாகிய அடுத்த கனமே மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் விசேட செயலணி ஒன்றை நாட்டின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் அமைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தறை, கம்புறுபிட்டிய பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, ´எதிர்தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெண்களுக்கு கிடைக்கும் அவதூறு சொல்லை தடுக்க முடியாது.

நாடு பயணிக்கும் பாதையில் திருப்பம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது. நான் நாட்டை ஆட்சி புரிய வர போவதில்லை மாறாக நாட்டுக்கு சேவை ஆற்றவதே எனது நோக்கம்.

ஜனாதிபதி பதவி என்பது எனக்கு பொக்கிசமாகவும், உரிமை மிகு சொத்தாகவும் அமைய போவதில்லை. மாறாக அது நாட்டு மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒரு ஆயுதம் மாத்திரமே. ஆயுதம் என்றால் அதனை பயன்படுத்தி மக்களை அழிப்பது நோக்கம் அல்ல.

எதிர்தரப்பு வேட்பாளரை போன்று மக்கள் நீரை கேட்டு போராடிய போது துப்பாக்கி சூடு நடத்துவதில்லை. அதேபோல், எரிப்பொருள் மானியம் கேட்டு போராடிய போது, ஊழியர் நம்பிக்கை நிதியத்தை தவறாக பயன்படுத்திய போது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியமை போன்று அச்சுறுத்த போவதில்லை.

கடந்த ஆட்சியை போன்று மனிதர்களை கொலைச் செய்யும் கலாச்சாரம் எனது அரசாங்கத்தில் இருக்காது´ என்றார்.