மாடியில் இருந்து தவறி விழுந்து 3 பிள்ளைகளின் தந்தை மரணம்

272 0

வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டீமலை பிரதேசத்தில் வளஹா வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்றிரவு நிகழ்ந்துள்ளது. குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

தற்போது சடலமானது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.