யாழ்.புதிய பொலிஸ்நிலையம் ராசியில்லையாம்! பொலிஸார் கவலை!

301 0

j-policeயாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.

இது பற்றி அவர்கள் தெரிவித்துள்ளதாவது,நாங்கள் எப்போது புதிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டோமோ அன்றிலிருந்து எமக்கு கண்டம் ஆரம்பித்து விட்டது.

இக் கட்டிடத்தை கட்டிய பொறியியலாளர் பொலிஸ்நிலையம் திறந்து மூன்றாம் நாளே இருதய நோயினால் இறந்து விட்டார்.அத்துடன் கட்டிட நிர்மாணங்களை மேற்பார்வை செய்த மேற்பார்வையாளர் விபத்தில் பலியாகினார்.

புதிய பொலிஸ் நிலையம் திறப்பதற்கு எப்போதோ திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும் பல தடைகள் ஏற்பட்டு நிர்மாணப்பணிகளில் இழுத்தடிப்புக்கள் ஏற்பட்டது.இறுதியில் அவசரமாக திறப்பு விழாவும் செய்யப்பட்டது. திறப்பு விழாவின் போதும் பல இன்னல்கள் தடைகள் ஏற்பட்டது.

அன்றைய தினமே பெண் பொலிஸார் ஒருவர் வழுக்கி விழுந்து காயமடைந்தார் . புதிய பொலிஸ் நிலையம் திறந்ததில் இருந்தே பிரச்சனைகளும் வர ஆரம்பித்தது.யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்தது. யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தண்டனை இடமாற்றம் அடைந்தார் .

சுன்னாகம் கொலை வழக்கில் இங்கு பணியாற்றி வந்த பொலிஸாரும் சிக்கினர். தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் ஐந்து பொலிஸார் சிக்கினர்.

இதன்பின்னர் மக்களிற்கும் எமக்குமிடையிலான விரிசல் அதிகமானது . தொடரந்து பிரச்சினைகள் வந்த வண்ணமே உள்ளது. என குறிப்பிட்டனர்.