போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை – சஜித்!

307 0

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘எந்த மதத்தினையும் இனத்தையும் வேறுபடுத்தாது பௌத்த சமயத்திற்கு முன்னுரிமையளித்து, முழு நாட்டினையும் ஐக்கியப்படுத்தும் புதிய யுகத்தினை உருவாக்குவேன்.

சிறிய குழுவினர் பயங்கரவாத செயற்பாட்டினை முன்னெடுப்பார்கள் என்பதாலும், மனிதப்படுகொலை செய்வார்கள் என்பதாலும் முழு இனத்தையும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல இடமளிக்கமாட்டோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.