மின்னேரியாவில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு 60 பேர் படுகாயம்!

322 0

மின்னேரியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(புதன்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணகைளை முன்னெடுத்து வருகின்றனர்.