பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.
பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜன பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “எதிர்வரும் 28ஆம் திகதி எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் யாழில் மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ளனர்.
எனவே இக்கட்சியின் வேட்பாளர்கள் மக்களை தேடிச் செல்கின்றமையினால் மக்கள் தமது ஆதரவை வழங்கி கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

