திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஜெயலலிதா விரல் ரேகையுடன் கட்சி அங்கீகார கடிதம் தாக்கல்

303 0

201610291904553395_admk-thiruparankundram-authorization-letter-for-the_secvpfதிருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஜெயலலிதா விரல் ரேகையுடன் கட்சி அங்கீகார கடிதம் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கும். இதற்காக அந்த கட்சியின் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் அங்கீகார கடிதம் வழங்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவுடன் கட்சியின் அங்கீகார கடிதமும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கையெழுத்திட வேண்டிய இடத்தில் விரல்ரேகை பதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஜீவாவிடம் கேட்ட போது, ‘அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள கட்சியின் அங்கீகார கடிதத்தில் முதல்-அமைச்சரின் கையெழுத்து இல்லாமல் விரல்ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மை தான். அவ்வாறு ரேகையுடன் கூடிய அங்கீகார கடிதம் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வாறு தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அளித்துள்ள சான்றையும் சேர்த்து தாக்கல் செய்துள்ளனர். எனவே, அ.தி.மு.க. அளித்துள்ள அங்கீகார கடிதத்தில் ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்றார்.