2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்ட தொகை நிர்ணயிப்பு!

230 0

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டுத் தொகையானது 1,474 பில்லின் ரூபாவாக நிதியமைச்சு நிர்ணயிப்பு செய்துள்ளது.

குறித்த இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது எதிர்வரும் 23 ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதனாலும் 2019-08-03 திகதி அன்று அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வகையில்  2020 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30  ஆம் திகதிவரையிலான 4 மாத காலப்பகுதிக்காக அரசாங்கததின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை கடந்த முதலாம் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.