காங்­கி­ரஸில் இணைந்­து­கொண்டால் எது­வு­மில்­லாமல் ‘சீரோ’ ஆகி­வி­டு­வீர்கள் !

318 0

முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைந்­து­கொண்டால் எது­வு­மில்­லாமல் ‘சீரோ’ ஆகி­வி­டு­வீர்கள் என்று சிலர் உது­மா­லெப்­பை­யிடம் கூறி­யி­ருக்­கின்­றனர்.

 

ஆனால், அவர் இங்­கி­ருந்­த­வாறே ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல் சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி சபை தொடர்பில் கட்சித் தலைமை மீதி­ருக்­கின்ற நம்­பிக்கை வீண்­போக மாட் ­டாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

தேசிய காங்­கி­ரஸின் இணை ஸ்தாப­கரும், அக்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.எஸ். உது­மா­லெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சகிதம் நேற்று கட்சித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் முன்­னி­லையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் மீள இணைந்­து­கொண்­டனர்.

அவர்­க­ளுடன் தேசிய காங்­கி­ரஸின் கொள்கை பரப்புச் செய­லாளர் சட்­டத்­த­ரணி எம்.எம். பஹ்ஜி, பொத்­துவில் அமைப்­பாளர் ஏ. பதூர்கான், அம்­பாறை மாவட்ட இளைஞர் அமைப்­பா­ளரும் இறக்­காமம் அமைப்­பா­ள­ரு­மான எம்.எஸ்.எம். பரீட், அட்­டா­ளைச்­சேனை முன்னாள் பிரதி தவி­சாளர் எம்.எஸ். ஜஃபர், மூதூர் பிர­தேச அமைப்­பாளர் நவாஸ், அர­சியல் உயர்­பீட உறுப்­பினர் எம்.எல்.எம்.ஏ. காதர் மற்றும் நூற்­றுக்­க­ணக்­கான ஆத­ர­வா­ளர்கள் இணைந்­து­கொள்ளும் நிகழ்வு தாருஸ்­ஸ­லாமில் நடை­பெற்­ற­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து உரை­நி­கழ்த்­திய ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது;

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ். உது­மா­லெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் எம்­முடன் மீளி­ணை­வதை மன­தார வர­வேற்­கிறேன். கட்­சியின் ஆரம்­ப­கால செயற்­பாட்­டா­ளர்­க­ளான இவர்கள் எதிர்­கா­லத்தில் கட்­சியை சிறந்த முறையில் முன்­னெ­டுத்துச் செல்­வார்கள் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்­கி­றது.

நாட்டின் தலை­வி­தியை தீர்­மா­னிக்கும் ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் நடை­பெறும் இந்த மீளி­ணை­வா­னது தனி­ம­னி­தனை விடுத்து, சமூ­கத்தை பலப்­ப­டுத்தும் ஒரு செயற்­பா­டாகும். கட்­சியில் இருக்­கின்­ற­வர்­களை பல­வீ­னப்­ப­டுத்­தா­மலும், புதி­தாக வரு­ப­வர்­களை மலி­னப்­ப­டுத்­தா­மலும் செயற்­பா­டு­களை பகிர்ந்­து­கொண்டு ஒரு­மித்து பய­ணிக்க வேண்டும். இப்­போது எல்­லோரும் ஒன்­று­சேர்ந்து உத்­வே­கத்­துடன் கட்­சியை வழி­ந­டாத்த வேண்டும்.

தொல்­பொருள் திணைக்­களம், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­களம், வன பரி­பா­லன திணைக்­களம் ஆகி­ய­வற்றால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணி­களை மீட்­ப­தற்­காக நாங்கள் நீண்­ட­கா­ல­மாக போராடி வரு­கின்றோம். காணிப் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரிடம் பேசி­யி­ருக்­கின்றோம். ஒலுவில் துறை­மு­கத்­தினால் ஏற்­பட்­டுள்ள பல பிரச்­சி­னை­களும் இருக்­கின்­றன. இவை எல்­லா­வற்­றையும் தீர்க்­கின்ற பாரிய பொறுப்பு எங்­க­ளுக்கு இருக்­கி­றது.

சாய்ந்­த­ம­ருது முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு தலை­யி­டி­யான பிர­தே­ச­மாக மாறி­யி­ருந்­தது. பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­னரும், சுயேட்­சைக்­குழு உறுப்­பி­னர்­களும் எங்­களை பல­த­ட­வைகள் சந்­தித்து பேசி­யி­ருக்­கின்­றனர். முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மையின் நிலைப்­பாடு தொடர்பில் அவர்­க­ளுக்கு இப்­போது சரி­யான தெளிவு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. கல்­மு­னைக்கு பாத­க­மில்­லாமல் சாய்ந்­த­ம­ரு­துக்கு சபை வழங்­கு­வது தொடர்பில் கட்சித் தலை­மை­மீது வைத்­தி­ருக்கும் நம்­பிக்கை வீண்­போக மாட்­டாது.

சமூ­கத்­துக்கு தேவை­யான வேட்­பாளர் ஒரு­வரை நாங்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் நிறுத்­தி­யி­ருக்­கிறோம். துடிப்­பான இளம் ஜனா­தி­ப­தியை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான தேர்தல் பிர­சாரப் பணி­களில் அனை­வரும் பங்­க­ளிப்புச் செய்­ய­வேண்டும். எதிர்­வரும் 16ஆம் திகதி சஜித் பிரே­ம­தா­சவின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு எங்­க­ளது வாக்­க­ளிப்பு விகி­தா­சா­ரத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றார்.

உது­மா­லெப்பை உரை

எம்.எஸ். உது­மா­லெப்பை உரை­யாற்­றும்­போது கூறி­ய­தா­வது;

முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்­ரஃ­புடன் நாங்கள் கட்­சி­யி­லி­ருந்த காலத்தில் நான் யாப்பு, சட்­டங்கள் என்­றெல்லாம் பார்ப்­ப­தில்லை. தலைவர் சொன்னால் அதை அப்­ப­டியே செய்­கின்ற அள­வுக்கு அவ­ருக்கு விசு­வா­ச­மாக இருந்தோம். தேசிய காங்­கிரஸ் ஊடாக இரண்டு தட­வைகள் மாகாண சபைக்கு சென்­றி­ருக்­கிறேன். நான் கட்­சியில் இருக்­கும்­வரை அதா­உல்­லா­வுக்கும் கட்­சிக்கும் விசு­வா­ச­மா­கவே இருந்­தி­ருக்­கிறேன்.

தலை­மைத்­துவம் எங்கள் மீது சந்­தே­கப்­பட்டால், ஒரு வினா­டி­கூட நாங்கள் கட்­சியில் இருக்­க­மாட்டோம். அதா­உல்­லா­வை­விட எனக்கு அதிக மக்கள் ஆத­ர­வி­ருப்­ப­தாக சிலர் அவ­ரிடம் சொல்­லி­யி­ருக்­கின்­றனர். அதனை நம்பி எங்­களை சந்­தே­கப்­பட்­ட­போது நாங்கள் வெறும் ஆட்­க­ளாக அந்தக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி வந்தோம். அட்­டா­ளைச்­சேனை, பொத்­துவில், திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள தேசிய காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் என்­னுடன் சேர்ந்து கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றி­னார்கள்.

பல கட்­சிகள் எங்­களை உள்­வாங்கும் நோக்கில் அழைப்பு விடுத்­தன. என்­னுடன் சேர்ந்து கட்­சி­யை­விட்டு வெளி­யே­றி­ய­வர்கள் ரவூப் ஹக்­கீ­முடன் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­னார்கள். அதில் எங்­க­ளுக்கு உடன்­பாடும் நம்­பிக்­கையும் ஏற்­பட்­டது. நான் இங்கு வரும்­வ­ரைக்கும் பல கட்­சி­க­ளி­ட­மி­ருந்து வந்த அழைப்­பு­களை நிரா­க­ரித்­து­விட்­டுத்தான், இப்­போது முஸ்லிம் காங்­கிரஸ் என்ற தாய்க் கட்­சியில் மீள இணைந்­தி­ருக்­கிறேன்.

முஸ்லிம் சமூ­கத்­துக்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­ற­போது, முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை அதை புத்­தி­சா­து­ரி­ய­மாக கையாண்டு அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­யதை நாங்கள் என்­றைக்கும் மறக்­க­மு­டி­யாது. குறிப்­பாக முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளையும், சமூ­கத்­தையும் பாதிக்­கின்ற விட­யங்கள் நடை­பெ­ற­வி­ருந்­த­போது, ரவூப் ஹக்கீம் மேற்­கொண்ட முயற்­சிகள் பாராட்­டப்­பட வேண்­டி­யவை.

சிறு­பான்­மை­யினர் எந்தக் கார­ணத்­துக்­கா­கவும் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை ஆத­ரிக்­க­மு­டி­யாத நிலையில் இருக்­கின்­றனர். நாட்டின் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்­கின்ற கால­கட்­டத்தில், அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் சக்­தியை பலப்­ப­டுத்தும் நோக்கில் எவ்­வித நிபந்­த­னை­களும் இல்­லாமல் நாங்கள் இணைந்­தி­ருக்­கின்றோம். எதிர்­வரும் காலத்தில் கட்சித் தலை­மைக்கு விசு­வா­ச­மாக இருந்து புதி­ய­தொரு யுகம் படைப்போம் என்றார்.

ஜெமீல் உரை

ஏ.எம். ஜெமீல் உரை­யாற்­றும்­போது கூறி­ய­தா­வது;

நான் மாணவ தலை­வ­னாக இருக்­கின்ற காலத்­தி­லி­ருந்தே முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் எனது பய­ணத்தை ஆரம்­பித்தேன். அதி­லி­ருந்­து­கொண்டே சமூ­கத்­துக்கும் கட்­சிக்கும் என்­னா­லான பல அர்ப்­ப­ணிப்­பு­களைச் செய்­தி­ருக்­கிறேன். அண்­மையில் எனக்கு ஏற்­பட்ட தடு­மாற்­றத்தின் கார­ண­மாக கட்­சியை விட்டு விலகிச் சென்­றி­ருந்­தாலும், சமூ­கத்தின் நலன்­க­ருதி தூர­நோக்கு சிந்­த­னை­யுடன் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பத­வியை துறக்கும் முடி­வுக்கு அர­சி­யல்­வா­தி­களை வழி­ந­டத்­தி­யது என்னை கவர்ந்திழுத்தது.

முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவதற்கு பொருத்தமான அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது. அந்தக் கட்சியை தலைமைதாங்கும் ரவூப் ஹக்கீம், சமூகத்தை வழிநடாத்துவதற்கு மிகப் பொருத்தமான தலைவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சமூகத்தை சரியான பாதையில் கொண்டுசெல்லும் கட்சியில் இப்போது என்னை மீளிணைத்துக் கொண்டுள்ளேன்.

எவ்வித நிபந்தனைகளும் விதிக்காமல் சாதாரண அங்கத்தவனாக நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்கிறேன். கல்முனைக்கு பாதிப்பில்லாத வகையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையினை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கையை மாத்திரம் நான் தலைமையிடம் விடுத்திருக்கிறேன். அதனை கட்சித் தலைமை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார்.