பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

224 0

பெல்மடுல்ல நகரில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் எஹலியகொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.