ஐந்து துப்பாக்கிகளுடன் பெண் ஒருவரை பதுளை ரிதிமாலியத்த பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
பதுளைப் பகுதியின் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து ரிதிமாலியத்தையை அண்மித்த பகுதி வீடொன்றினை சுற்றி வலைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.
அவ் வேளையில் படுக்கை அறை கட்டிலொன்றிற்கடியில் பசளைப் பையொன்றிலான பொதியை மீட்டு சோதனையிட்ட போது அப் பொதிக்குள்ளிருந்த ஐந்து துப்பாக்கிகள் இருப்பதைக்கண்டு அவற்றினை பொலிசார் மீட்டனர்.
அத்துடன் அத்துப்பாக்கிகளுக்கு உரிமையாளரென்று கருதப்பட்ட பெண் ஒருவரையும் பொலிசார் கைது செய்தனர்.
இத்துப்பாக்கிகள் அனைத்தும் அனுமதிப் பத்திரமற்ற சட்ட விரோதமானவைகளென்று பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின்னர்மகியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

