ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவின் மூலம் மேலும் 2 இலட்சம் வாக்குகள் உறுதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன் ஓரிரு தினங்களில் மேலும் 20 கட்சிகளும் எம்முடன் இணையவுள்ளன. எனவே கோதாபய ராஜபக்ஷ நிச்சயம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
எல்பிட்டி பிரதேசசபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித பிரசாரங்களை முன்னெடுக்காத போதிலும் எம்மீது நம்பிக்கை வைத்து 13 வீத மக்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே பிரசார நடவடிக்கைகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் சு.க ஆதரவாளர்களின் வாக்குகளுடன் கோத்தாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

