தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் பதிவு!

254 0

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதனுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று (12) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு  குறிப்பிட்டுள்ளது.