6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்!

171 0

ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அரச அச்சகத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை, அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்த நிலையில்,  வாக்குச்சீட்டினை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.