தேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது

34 0

புள்ளடியிட்ட வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இளைஞர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய , தல்காஸ்பேவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற எல்பிட்டியா பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குச் சாவடிகளுக்குள் வாக்குச் சீட்டுகள் அல்லது புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளை புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறலாகும்.