மொட்டு வசமானது எல்பிட்டிய பிரதேச சபை !

291 0

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 47 நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

அதனையடுத்து வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமானது. அதனையடுத்து இறுதித் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி கொண்டு எல்பிட்டிய பிரதேசசபை அதிகாரத்தை தனதாகிக்கொண்டது.