மலையகத்தில் தொடரும் அதிக மழையின் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கம் வான் பாய்ந்துள்ளது.
மலையகத்தில் தொடரும் மழையின் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் பொகவந்தலாவை பகுதியில் பெய்த கடும் மழையின் காரணத்தினால் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து காசல்ரீ நீர்த்தேக்கம் வான் பாய்ந்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் (12) பெய்த கடும் மழையினால் பொகவந்தலாவை கிலானி பகுதி நீரில் முழ்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது

