இந்த வாரத்தில் ஒரு நாள் மட்டுமே நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் காரணமாக இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை ஒரு நாள் மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதுடன் அடுத்த நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள விவாதத்தை தொடர்ந்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பாகவும் இன்று விவாவத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

