புத்தளம் – ஆராச்சிகட்டு பகுதியில் கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து 18 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே 18 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்கும் பிரிவினரிடத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

