தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள நியாயமற்ற பகிஷ்கரிப்பிற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்த அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சில தொழிற் சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு அரசியல் ரீதியில் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிடப்பட்டதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் அதனை நிறைவேற்றியிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ரெயில் தொழிற்சங்கங்கள் நேற்று மாலை நடத்திய பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவடைந்ததால், பணிப்பகிஷ்கரிப்பு இன்றையதினமும் இடம்பெறும் என்று ரயில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

