வெல்லம்பிட்டிய திடீர் தீ விபத்தில் சிக்கி இளைஞன் பலி; 4 கடைகள் தீக்கிரை

260 0

வெல்லம்பிட்டிய பகுதியில் கடைத் தொகுதி ஒன்றில் பரவிய திடீர் தீயில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அத்துடன் 4 கடைகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிந்துள்ளன.

வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியைச் சேர்ந்த அருளப்பன் பிரியதர்ஷன் எனும் 21 வயது இளைஞனே இந்த தீ பரவலில் சிக்கி உயிரிழந்தவர் ஆவார்.

நேற்று இரவு 11.00 மணியளவில், வெல்லம்பிட்டி அவிஸ்ஸாவளை வீதியில் உள்ள கடைத் தொகுதியிலேயே இந்த திடீர் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து பிரதேச வாசிகள், பொலிசார் மற்றும் வெலிக்கடை தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை அனைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீ அனைக்கப்பட்ட நிலையில் தீயில் சிக்கிய இளஞன் ஒருவர்  கடும் தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.