சட்டமா அதிபரின் உறுதிமொழியையடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது !

285 0

முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்வது தொடர்பாக நீதிமன்றின் உத்தரவை அவமதித்தமை மற்றும் சட்டதரணிகள் தாக்கப்பட்டமை  தொடர்பாக  சட்டதரணிகள்   கடந்த 23 .09 தொடக்கம் மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றுடன் (29)கைவிடப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டதரணி எஸ்.கெங்காதரன் தெரிவித்துள்ளார் .

Image result for பணிப்பகிஷ்கரிப்பு

சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா சிரேஷ்ட சட்டதரணியும் வன்னி வலய சட்டதரணிகள் சங்க உபதலைவருமான அன்ரன் புனிதநாயகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடாத்தப்படும் என வழங்கிய வாக்குறுதியையடுத்தும் பிரதி சொலிஸ்ட ஜெனரல் குமார் ரட்ணம் முல்லைத்தீவு  சட்டதரணிகள் சங்க செயலாளர் சட்டதரணி எஸ்.கெங்காதரனை தொடர்புகொண்டு வழங்கிய உறுதிமொழியையடுத்தும் இதுவரை நாட்களாக நடைபெற்றுவந்த சட்டதரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு  நாளைமுதல் (30) கடமைகளில் ஈடுபடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே இதுவரை நாட்களாக வடக்கு சட்டதரணிகள் மேற்கொண்ட போராட்டதுக்கு ஆதரவளித்த கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாவட்ட சட்டதரணிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஏனைய வழிகளில் ஆதரவினைவழங்கிய சிவில் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் சட்டதரணி எஸ் .கெங்காதரன் தெரிவித்தார் .

அத்தோடு சட்டதரணிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு தொடர்பிலும் முல்லைத்தீவு பொலிஸாரால் B1218/19 ,B1219/19 என்ற பி அறிக்கை முல்லைத்தீவுக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .