கலவானை, மத்துகம வீதியின் கல்கெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிறிய ரக லொறி ஒன்றும் மற்றும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இடந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக லொறியில் பயணித்த சாரதி மற்றும் சாரதி உதவியாளர் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், விபத்தில் உயிரிழந்த சாரதி உதவியாளர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சாரதி 51 வயதுடைய கலவானை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலங்கள் கலவானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

