பிரேமதாச ஜனாதிபதியின் கீழ் ஐ.தே.க அரசாங்கம் விரைவில்-ரோஷி

296 0

பல குற்றச்சாட்டுக்களுடன் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை காட்டிலும் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வத்தளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படும் வரையில் தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாக அவர் இதன்போது தெரிவித்தார்.

போட்டியின்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிப் பெறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், பல வருடங்களின் பின்னர் பிரேமதாச ஜனாதிபதியின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகவுள்ளதாக ரோஷி சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.