இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தற்போதைய சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் உடனடியாக அமுலாகும் வரையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
எவன்ட்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாபதியுடன் தில்ருக்ஷி டயல் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையிலேயே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

