தேர்தல் சட்டங்களை மீறாது பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்படுங்கள் -பஷில்

314 0

தேர்தல் சட்டங்களை மீறாமல் பொது சட்டத்தின் பிரகாரம், மக்களுக்கு  இடையூறு விளைவிக்காத வகையில் தேர்தல் பிரச்சார  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ எதிரணியின் அனைத்து மாவட்ட  தேர்தல் ஒழுங்கமைப்பு குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

பொதுச் சட்டத்தையும், தேர்தல் சட்டத்தையும் மீறுபவர்களுக்கு இடம் கிடையாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி மட்டத்திலும் கடுமையாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எதிரணியின் தேர்தல் ஒழுங்குப்படுத்தல் குழு, சிவில் அமைப்புக்களுடன் இன்று பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.