ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது

379 0
ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவினை வைத்திருந்த நபர் ஒருவர் முல்லேரியாவ புதிய நகரம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது அவரிடம் இருந்து 107 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் ஒரு கிலோ 750 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

முல்லேரியாவ புதிய நகரம் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் இன்று (24) புதுக்கடை இல-08 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.