மன்னாரில் கடற்படையினர் அட்டகாசம், 71 மீனவர்கள் கைது!

60 0

625-0-560-320-160-600-053-800-668-160-90-10மன்னார், முத்தரிப்புத் துறையில் கடற்படையினரால் 71 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் 13 படகுகளும் கடற்படையினரால் பறிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது காப்புறுதி பற்றுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பிரதி ஆகியவற்றை பரிசீலித்த சிலாவத்துறை கடற்படையினர் குறித்த மீனவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதில் நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த 60 பேரும், வங்காலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 4பேரும், சிலாவத்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 7பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நறுவிலிக்குள மீனவர்களின் 9 படகுகளும், வங்காலை மீனவர்களின் ஒரு படகையும், சிலாவத்துறை மீனவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் சிலாவத்துறை கடற்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், மீனவர்களில் ஒருவரை விடுதலை செய்தால் கைதுசெய்யப்பட்ட அனைத்து மீனவர்களினதும் காப்புறுதி, பற்றுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை போன்றவற்றைக் கொண்டுவருவதாக தெரிவித்ததையடுத்து ஒரு மீனவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முத்தரிப்புத்துறை மீனவர்கள் இரண்டு கடற்படையினரைத் தாக்கியதையடுத்து தாம் மோசமாக கடற்படையினரால் நடாத்தப்படுவதாக மீனர்வகள் தெரிவித்துள்ளனர்.