கஞ்சா செடிகளுடன் ஹப்புத்தளையில் இருவர் கைது!

215 0

ஹப்புத்தளை பெரகலை செம்புவத்தை பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தனிநபருக்கு சொந்தமான நிலப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக ஹப்புத்தளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ஹப்புத்தளை பொலிஸ் அதிகாரி சாகர தயாரத்ன தலைமையிலான 7பேர் கொண்ட குழுவினர் நேற்று (சனிக்கிழமை) அப்பகுதியை இரகசியமாக சுற்றி வளைத்தனர்.

இதன்போது 20 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு, 382 மரங்கள் அவ்விடத்தில் அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு சந்தேகநபர்களையும் விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.