வடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் ரணில்-தயாசிறி

303 0

வடக்கு மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற பிரதமர் தயாராவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தளை மாவட்ட சம்மேளத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வித தவறுகளையும் செய்ய வில்லை. நாம் எமது தலைவருடன் இணைந்து சுதந்திர கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, பொதுஜன பெரமுனவின் சகோதரர்களையும் இணைத்துக் கொண்டு கடந்த 4 நான்கு வருடங்களாக பயணித்தோம்.

எனினும், அங்கிருந்தவர்கள் எங்களது வயிற்றில் அடித்ததயே செய்தார்கள்.

எனினும் நாங்கள் பின்வாங்கவில்லை. நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடனும் இணைந்தாலும் நாம் அவ்வாறு செய்ய வில்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எங்களது தலைவருக்கு ஊக்கம் அளித்தோம்.

20 ஆவது அரசியலமைப்பை கொண்டு வர கூறினார்கள். 19 தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இன்று வரை 20 கொண்டு வரப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு வேறு 20 கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது பிரதமருக்கு வடக்கு மக்கள் தொடர்பில் திடீரென அக்கறை வந்துள்ளது. கடந்த நான்கரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதாக தேங்காய் அடித்து தேங்காய் அடித்து இந்த அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள ஒரு யோசனையை கூட கொண்டு வர வில்லை.

வடக்கு மக்களை கவனிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்து வருகிறார்.

இது தான் மீண்டும் வடக்கு மக்களை ஏமாற்றும் திட்டம் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.