தேக்கு மரக்குற்றிகளுடன் நபர் கைது!

262 0

ஆராச்சிக்கட்டுவ, குமாரக்கட்டுவ – அடிப்பல வீதியில் அனுமதிப்பத்திரமின்றி லொரியொன்றில் தேக்கு மரக்குற்றிகள் ஒரு தொகையை கொண்டுசெல்ல முயன்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் குறித்த மரக்குற்றிகளுடனான லொரி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதில் மொத்தம் 14 மரக்குற்றிகள் காணப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.