ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கோரி அகில இலங்கை பிக்குமார் முன் னணி பேரணியாகச் சென்று அலரிமாளிகையில் மகஜரொன்றை கையளித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பு – விஹாரமகா தேவி பூங்காவில் ஒன்றுகூடிய பெளத்த பிக்குமார் விஷேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து பேரணியாக அலரிமாளிகை நோக்கி சென்றனர். இந்த பேரணியில் நூற்றுக்குமேற்பட்ட பௌத்த பிக்குக்கள் கலந்துகொண்டனர். பேரணியாகச் சென்ற இவர்கள் அலரிமாளிகையில் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கோரும் மகஜரை கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உக்கொட தம்மிந்த தேரர் தெரிவிக்கையில்,
அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராகக் களமிறங்குவதற்கு பிக்குமார் முன்னணி ஆசீர்வாதம் வழங்குகின்றது.மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்திகளை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எவ்வித இன மத பேதமும் இன்றி அனைவருக்கும் சமமான ஆட்சியை நடத்துவார் என்ற நம்பிக்கையும் காணப்படுகின்றது என்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

