கோத்­தாவின் வழக்கு திங்கள்வரை ஒத்­தி­வைப்பு

276 0

எவன்கார்ட் நிறு­வ­னத்­துக்கு மிதக்கும் ஆயுத களஞ்­சி­யத்தை முன்­னெ­டுத்து செல்ல அனு­ம­தி­ய­ளித்­ததன் ஊடாக அர­சாங்­கத்­துக்கு 1140 கோடி ரூபா நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு, பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்­தபாய ராஜ­பக் ஷ உள்­ளிட்ட 8 பேருக்கு எதி­ராக கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் தாக்கல் செய்த வழக்கு  23 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வரையில் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று குறித்த வழக்கு  கொழும்பு மேல­திக நீதிவான் தனுஜா ஜய­துங்க  முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது, கடந்த 12 ஆம் திகதி மேன் முறை­யீட்டு நீதி­மன்­ற­மா­னது, நீதிவான் நீதி­மன்றில் தொட­ரப்­பட்­டுள்ள இந்த வழக்கு குறை­பா­டு­டை­ய­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்­மா­னித்து விடு­விக்க உத்­த­ர­விட்­டுள்­ளதால் கோத்தா உள்­ளிட்ட சந்­தேக நபர்­களை வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கு­மாறு அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணிகள் கோரினர்.

எனினும் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் குறித்த தீர்ப்பின் பிரதி, நீதிவான் நீதி­மன்­றுக்கு கிடைக்­க­வில்லை என சுட்­டிக்­காட்­டிய மேல­திக நீதிவான் தனுஜா ஜய­துங்க, வழக்கை 23 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்­த­துடன், மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தீர்ப்பின் பிர­தியைப் பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றின் பதி­வா­ள­ருக்கு ஆலோ­சனை வழங்­கினார்.

முன்­ன­தாக முன் னாள் பாது­காப்பு செயலர் கோத்­தபாய ராஜ­பக் ஷ, முன்னாள் மேல­திக பாது­காப்பு செயலர் சுஜாதா தம­யந்தி ஜய­ரத்ன,  இரா­ணு­வத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல்  வடுகே பாலித்த பிய­சிறி பெர்­னாண்டோ, கரு­ணா­ரத்ன பண்டா எகொ­ட­வல,  முன்னாள் கடற்­படை தள­பதி அத்­மிரல் சோம­தி­லக திஸா­நா­யக்க, எவன்கார்ட் நிறு­வன தலைவர் மேஜர் நிசங்க சேனா­தி­பதி, முன்னாள் கடற்­படை தள­பதி  அத்­மிரால் ஜயநாத் குமா­ர­சிறி கொலம்­பகே,  முன்னாள் கடற்­படை தள­பதி வைஸ் அத்­மிரால் பிரன்சிஸ் டயஸ் ஜய­ரத்ன பெரேரா ஆகிய 8 பேருக்கு எதி­ராக 19 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் வழக்­குத்­தொ­டுத்­தது.

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் 2015 ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் கொழும்பில் எவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்­விசஸ் தனியார் நிறு­வ­னத்­துக்கு மித­மிஞ்­சிய சலுகை, சட்ட விரோ­த­மான பிரதி பலன் அல்­லது அனு­ச­ரணை அல்­லது அனு­கூலம் ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுப்­பதை நோக்­காகக் கொண்டு அல்­லது அவ்­வாறு இடம்­பெறும் என அறிந்­தி­ருந்தும்  குறித்த நிறு­வ­னத்­துக்கு மிதக்கும் ஆயுத களஞ்­சி­யத்தை அமைக்க அனு­மதி கொடுத்­ததன் ஊடாக ஊழல் எனும் குற்­றத்தை புரிந்­தமை அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­களே இந்த 8 பேருக்கும் எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்­ளன.

இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் டில்ருக் ஷி டயஸ் விக்­ர­ம­சிங்க, ஆணைக்­கு­ழுவின் எழுத்து மூல அனு­ம­தியைப் பெறா­ம­லேயே தான் உள்­ளிட்ட 8 பேருக்கு எதி­ரா­கவும் வழக்கு தாக்கல் செய்­துள்­ள­தா­கவும், எனவே அப்­படி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள நீதிவான் நீதி­மன்றம் எடுத்த தீர்­மா­னத்தை இரத்து செய்து தான் உள்­ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்தும் விடு­விக்­கு­மாறும் பிர­தி­வா­திகள் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் இலஞ்ச ஊழல் சட்­டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆட்­சே­ப­னத்தை முன்­வைத்­தனர். எனினும் அதனை நீதிவான் நீதி­மன்றம் அப்­போது நிரா­க­ரித்து வழக்கை விசா­ரிக்க தீர்­மா­னித்­தது.

இந்­நி­லையில்  வழக்கை விசா­ரணை செய்ய, கொழும்பு பிர­தான நீதிவான் எடுத்த முடிவை இரத்து செய்யக் கோரி மேல் நீதி­மன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்­யப்­பட்­டது. அதுவும் நிரா­க­ரிக்­கப்­பட்டு அந்த தீர்­மானம்  நியா­ய­மா­னது என கடந்த பெப்­ர­வரி மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.மேன் முறை­யீட்டு நீதி­மன்றில்  மேல் நீதி­மன்றம், நீதிவான் நீதி­மன்­றங்­களின் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக மீளாய்வு மனு கோத்­தபாய சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டது.

அந்த வழக்கை பரி­சீ­லனை செய்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், குறித்த வழக்கை நீதிவான் நீதி­மன்றம் விசா­ரிக்க இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பித்து   தன் முன் முன்­வைக்­கப்­பட்ட மேன் முறை­யீட்டு மீளாய்வு மனுவை விசா­ரித்­தது.

இதன்­போது முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்தா சார்பில், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி, சட்­டத்­த­ர­ணி­க­ளான சுகத் கல்­தேரா, ருவந்த குரே, பாரித் டி மெல் ஆகியோர் சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­த­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய ஆஜ­ராகி வாதங்­களை  முன்­வைத்­தி­ருந்­தனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்­பாளர் டில்­ருக்ஷி டயஸ் விக்­ர­ம­சிங்க, ஆணைக்­கு­ழுவின் எழுத்து மூல அனு­ம­தியைப் பெறா­ம­லேயே தான் உள்­ளிட்ட 8 பேருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­துள்­ள­தா­கவும், எனவே அப்­படி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை இரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறு  கோத்தபாய ராஜபக் ஷ சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டே கடந்த 12 ஆம் திகதி  அவர்களை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.