ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில் தயாசிறி! – செஹான்

178 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தனித்து தீர்மானங்களை எடுக்கும் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் முயற்சியில் உள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவா குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தலுக்காள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கூட்டணிக்கு  பாதிப்பு  ஏற்படும் வகையில்  பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எவரும் இதுவரையில் கருத்துரைக்கவில்லை.

சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் உள்ளார். ஆனால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பல தீர்மானங்களை தனித்து மேற்கொள்கின்றமையினால் சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முயற்சிகளில் ஈடுப்படுகின்றாரா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவின்வெற்றியினை தடுக்க முயற்சிக்கும் தரப்பினர் மத்திய  வங்கியின் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள். சவால்கள், அரசியல் சூழ்ச்சிகள் வெற்றிப் பெறுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.