அடுத்த 5 ஆண்டுக்குள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்

168 0
நாட்டுக்குள் புதிய முதலீட்டாளர்களை உருவாக்கக்கூடிய பின்புலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுக்குள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது பல சவால்களுக்கு முகம்கொடுத்தாகவும், மெது மெதுவாக அந்த சவால்களை வெற்றிக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சக்திமயப்படுத்த முடிந்ததாகவும் பிரதமர் கூறினார்.

அலரி மாளிகையில் நேற்று (18) வெளிவாரி பட்டதாரிகள் 4200 பேருக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ´வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பாதையை வலுப்படுத்துவதே எமது முக்கிய நேநாக்கம். அன்று அதனை விரைவாக செய்யக்கூடிய பொருளாதாரம் இருக்கவில்லை, அப்படியிருந்திருந்தால் அனைவருக்கும் விரைவான சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்க முடியும்.

ஷஆனால் இன்று நாம் வேலைவாய்புகளை வழங்கி, பொருளாதாரத்தை சக்திமயப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

தொழில்வாய்புகளை பெற விரும்பும் அனைவருக்கும் அதனை வழங்கக் கூடிய வழிமுறைகளை எதிர்வரும் ஐந்து வருடங்களில் முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை இங்கு உரையாற்றிய அமைச்சர் வஜிர அபேவர்தன, தற்போதைய பிரதமர் முன்பு கல்வியமைச்சராக இருந்த போது நாட்டுக்கு பல பயனுள்ள பணிகளை ஆற்றியுள்ளதாக கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தால் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு படிப்படியான தீர்வை வழங்க முடிந்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கமே கல்விக்காக பாரிய நிதியை செலவு செய்வதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.