வட மாகாண பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து

310 0

577365493policவட மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சகலரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விசேட பொலிஸ் அறிவிப்பை வடமாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் குமாரவினால் விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் உள்ள சகல பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், தொகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோரின் விடுமுறைகள் மற்றும் ஒருநாள் ஓய்வு ஆகியனவே, இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

அவசரத் தேவை நிமித்தம் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், மாகாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை தனியாக சந்தித்து, விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.