2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம 2020 மே மாதம் 31ஆம திகதி வரையில டீசல் மற்றும் ஜெட் ஏ-1 ஐ இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, குறித்த 8 மாத காலப்பகுதிக்குள் 1.04 மில்லியன் டீசல் பீப்பாய்களையும் 1.28 மில்லியன் ஜெட் ஏ-1 பீப்பாய்களையும் இறக்குமதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஐக்கிய அரபு எமிரேட் இராஜ்யத்தின் M/s Mena Energy DMCC என்ற நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, 2019 அக்டோபர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2020 மே மாதம் 31ஆம் திகதி வரையான 8 மாத காலப்பகுதிக்குள் 9 இலட்சம் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய சிங்கப்பூர் M/s Vitol Asia Pte .Ltd., நிறுவனத்திடம் வழங்குவதற்கான ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

