மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எப்பல் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (16) மாலை 4.00 மணி அளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 2 கிராம் 630 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
48 வயதுடைய கிரேன்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண் இன்றைய தினம் (17) மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

